ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த்!

ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த்!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை விஜயகாந்தையே சேரும்.

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை விஜயகாந்தையே சேரும்.

விஜயகாந்த் தனது  100-ஆவது படத்துக்கு "கேப்டன் பிரபாகரன்'எனவும், தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் எனவும் பெயர் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதும், ஈழத்தின் மீதும் தனக்கிருந்த பற்றைப் பறைசாற்றியவர்.

"தென்னிந்திய, அகில இந்திய' என்றிருந்த தனது ரசிகர் மன்றத்தின் பெயரை 1982-இல் தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்' எனவும் பெயர் மாற்றம் செய்தார்.

2000-ஆம் ஆண்டு, பிப்ரவரி 12-இல் தனது ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, 2001-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, பலர் வெற்றியும் அடைந்தனர். 

2002-இல் "ராஜ்ஜியம்'படத்திலிருந்து அரசியல் குறித்த வசனங்கள் அவரின் படங்களில் பட்டாசாக வெடிக்கத் தொடங்கின. அப்படி, விஜயகாந்தின் இந்த அரசியல் நகர்வுகளைப் புரிந்துகொண்டதாலேயே ஆளும் அரசியல் கட்சிகள் அவருக்குப் பல நெருக்கடிகளைக் கொடுத்து வந்தன. அதேவேளையில், அரசியலுக்கு வர, சரியான களத்துக்காக, காரணத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். 

கள்ளக்குறிச்சியில் தன் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரின் திருமணவிழாவில் விஜயகாந்த் வருகையை முன்னிட்டு கட்டப்பட்ட மன்றக் கொடிக்கம்பங்களை பாமகவினர் வெட்டிச் சாய்த்ததாகச் சொல்லப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நடந்த திருமண நிகழ்வில் ராமதாஸையும், அவரின் மகன் அன்புமணி ராமதாஸையும் விஜயகாந்த் விமர்சிக்க, பதிலுக்கு விஜயகாந்தை ராமதாஸ் விமர்சிக்க, ராமதாஸ் - விஜயகாந்த் மோதல், பாமக தொண்டர்கள்  - விஜயகாந்த் ரசிகர்கள் என விரிவடையத் தொடங்கியது. பல இடங்களில் விஜயகாந்தின் மன்றக்கொடிகள் வெட்டிச் சாய்க்கப்பட, மன்ற நிர்வாகிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். விஜயகாந்த் நடித்த "கஜேந்திரா' படத்துக்கு ராமதாஸால் சிக்கல் எழுந்தது. விஜயகாந்தைக் கடுமையாக விமர்சித்து வட மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.இதையெல்லாம் புத்தி கூர்மையுடன் கையாண்டு பாமக வளுவாக இருந்த விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்று பேரவைக்குள் நுழைந்தவர் விஜயகாந்த். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com