
விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் நல்லடக்க நிகழ்வில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் பங்கேற்க உள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் தொண்டர்கள், உறவினர்கள், ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிக்க: விஜயகாந்த் மறைவு: சந்தனப்பேழையில் இடம்பெற்றிருக்கும் வாசகம்
விஜயகாந்த்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்ய உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.