எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
கனமழை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கனமழை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்னதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்பு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.
இதனால், தமிழகத்தில் தென்கடலோர மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. மேலும், இன்று 28 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...