செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

திடீரென கிணற்றில் குதித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்: வைரலாகும் விடியோ!

மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிணற்றில் குதிக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

News image

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Updated On :2 பிப்ரவரி 2023, 4:07 am

மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிணற்றில் குதிக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைப்பயிற்சி, மாரதான் ஓட்டம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூர்களில் தங்கும்போது காலை நேரங்களில் அப்பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு காணொலிகளை பகிர்ந்து உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு பதிவை வெளியிடுவார்.

அந்த வகையில், ஈரோடு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிணற்றில் குளிக்கும் காணொலியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அதில், தினந்தோறும் குளியலறையில் 2 குடம் தண்ணீரில் குளிக்கும் வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு இன்று காலை மகிழ்ச்சிகரமான கிராம குளியல் எனப் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்துள்ள இந்த காணொலி தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.