மலையடிப்பட்டி ஜல்லிக்கட்டு: 600 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. 
மலையடிப்பட்டி ஜல்லிக்கட்டு: 600 காளைகள் பங்கேற்பு
Published on
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தின் பாஸ்கா திடலில் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. 

ஆலயத்தில் சிறப்பு திருப்பலி முடிந்து புனித நீர் தெளிக்கப்பட்டு ஊர்வலமாக வாடிவாசல் வந்தடைந்த கோவில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து  திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ள காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டு வருகிறது.  600-க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் காணும் விழாவினை வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் கண்டு வருகின்றனர். 

வாடிவாசல் வழியே சீறிபாய்ந்து வரும் காளைகள், காளையர்களைக் கலங்கடித்த நிலையில் சில காளைகள் நின்றும், சில காளைகள் யாரும் தொடமுடியாதபடி களத்தில் விளையாடின. இருப்பினும் பல காளைகளை காளையர்கள் அடக்கி களத்தில் விளையாடி வருகின்றனர். 

காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளிக்காசு, ரொக்கம், கட்டில், பாத்திரங்கள் எனப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஏராளமான ரசிகா்கள் ஜல்லிக்கட்டை ரசித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com