சமையல் பணியாளர்கள் பணிநீக்கம் செய்த ஆட்சியர் உத்தரவு ரத்து
மதுரை: அதிக கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்த சமையல் பணியாளர்களை பணிநீக்கம் செய்து திருச்சி ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் சமையல் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட்டது. இதில், அதிக கல்வித் தகுதியுடன் சிலர் பணியில் சேர்ந்ததாகக் கூறி அவர்களது பணி நியமனத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், பணி நியமனம் குறித்த விளம்பரத்தில் கல்வித் தகுதி பற்றி அறிவிப்பு எதுவும் இல்லை என்று மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க.. நிலநடுக்கத்தின் துயரக் காட்சி: இறந்த மகளின் கைகளை பற்றியபடி தந்தை
அதனை ஏற்ற நீதிமன்றம், வேலை வாய்ப்பு அறிவிப்பில், கல்வி குறித்த தகுதி இல்லை என உறுதி செய்தது. இதையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.