பணி நியமன ஆணைகள் வழங்குவதில் தாமதம் ஏன்? அன்புமணி

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்பு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதில் தாமதம் ஏன் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்பு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதில் தாமதம் ஏன் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டி.என்.பி.எஸ்.சி. நடத்திய ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்பு பணிகளுக்கான எழுத்துத் தேர்வு,  சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகிய நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. இந்த தாமதம் கண்டிக்கத்தக்கது!

2021 அக்டோபரில் அறிவிக்கப்பட்டு, 09.01.2022 அன்று நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வுகளின் முடிவுகள்  22.03.2022 அன்று வெளியிடப்பட்டன. கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மொத்தமுள்ள 195 புள்ளியியல் சார்பு பணிகளுக்கு 1:5 என்ற விகிதத்தில் வேலை தேடுவோர் அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டது!

கலந்தாய்வில் தகுதியான 195 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், அதன்பிறகு இரு மாதங்களுக்கு மேலாகியும் அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. இந்த தேவையற்ற தாமதம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஐயத்தையும், அச்சத்தையும்  ஏற்படுத்தியிருக்கிறது!

அரசு பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை தேவை. நியமன ஆணை வழங்குவதில் செய்யப்படும் தாமதம் ஐயங்களையே ஏற்படுத்தும். அதற்கு அரசு இடம் கொடுக்கக் கூடாது. எனவே, புள்ளியியல் சார்பு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு உடனடியாக  நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com