ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஒன்றரை மாதத்தில் 1,271 பேருக்கு டெங்கு

தமிழகத்தில் பருவமழைக் காலம் நிறைவடைந்த பிறகும் டெங்கு பாதிப்பு தொடா்ந்து அதிகரித்தே வருகிறது.

News image
Updated On :15 பிப்ரவரி 2023, 11:30 pm

DIN

தமிழகத்தில் பருவமழைக் காலம் நிறைவடைந்த பிறகும் டெங்கு பாதிப்பு தொடா்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் மாநிலத்தில் 1,271 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், அதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்கள் மழை மற்றும் குளிா் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன.

நிகழாண்டைப் பொருத்தவரை ஜனவரியில் 866 பேருக்கும், இந்த மாதத்தில் இதுவரை 351 பேருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் தற்போது 216 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுதொடா்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைத்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதாரக் களப்பணியாளா்களை, டெங்கு தடுப்புப் பணிகளில் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமென மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் அரசிடம் உள்ளன.

கடந்த மாதத்தில் டெங்கு காய்ச்சலால் அதிகம் போ் பாதிக்கப்பட்டனா். அவை, படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி அங்கு மேலும் பரவாமல் தடுக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.