இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

வாழப்பாடி அருகே ரயிலில் அடிபட்டு இரு மயில்கள் பலி: கிராம மக்கள் சோகம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையத்தில் ரயிலில் அடிபட்டு இரு மயில்கள் பலியான சம்பவம், இப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Published On :

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையத்தில் ரயிலில் அடிபட்டு இரு மயில்கள் பலியான சம்பவம், இப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், தேசிய பறவையான மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், வனப்பகுதிகளில் மட்டுமின்றி கிராமப்புற வயல்வெளிகளிலும் இரைத்தேடி கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

மயில்களை, தமிழ் கடவுளான முருகனின் வாகனமாக கருதுவதாலும், நமது‌ தேசிய பறவை என்பதாலும் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் நிலையிலும், விவசாயிகளும், பொதுமக்களும் மயில்களை துன்புறுத்தாமல் பாதுகாத்து வருகின்றனர்.

இதுவே வாழப்பாடி பகுதியில் மயில்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும்.

இந்நிலையில், கோதுமலை வனப்பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை இரைத் தேடி சென்ற ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மயில் ஆகிய இரண்டும்,  மயில் கூட்டத்திலிருந்து பிரிந்து, சேலம் விருத்தாசலம் ரயில் பாதையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியாகின. 

இன்று புதன்கிழமை காலை, மயில்கள் ரயில் பாதை அருகே  இறந்து கிடந்ததை கண்டு இப்பகுதி மக்கள் சோகமடைந்தனர்.

இதுகுறித்து வாழப்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.