சேலம்: மக்கள் வழங்கும் மனுக்களை காகிதமாக பார்க்காமல் அவர்களின் வாழ்வாதாரமாக பார்க்க வேண்டும் என்று சேலத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றுள்ளார்.
இரண்டாம் நாள் நிகழ்வாக சேலம் மண்டலத்திற்கு உள்பட்ட நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், எம் ஆர் கே பன்னீர்செல்வம், மதிவேந்தன், காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு மாவட்டமாக சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகாரிகளிடம் அரசுத் திட்டங்கள் செயல்படுத்தபட்ட விதம், நிலுவையில் உள்ள பணிகள், விரைந்து முடிக்க வேண்டிய பணிகள், அதற்கான அவகாசம் குறித்து தனித்தனியே முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியவதாவது:
“மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை வைத்துள்ள இந்த அரசு, மக்களின் குறைகளை தீர்ப்பதற்கும் முக்கியத்துவம் அளிப்பதை உணர்ந்து அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும். தொடர் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். கிராம மக்களுக்கான அடிப்படை வசதிகளை முறையாக தரமாக செய்து தர வேண்டும். அதிகாரிகள்தான் அரசின் முகமாக மாவட்டங்களில் பணியாற்றுகிறார்கள். அதிகாரிகள் கடினமாக உழைத்தால் பொதுமக்களுக்கு பயன் கிடைக்கும் என்றார்.
மேலும், வேளாண் உற்பத்தி மதிப்பு கூட்டல் தொடர்பாக விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களை சந்தித்து பேசியதாகவும் விவசாயிகள் வருமானம் உயர்த்தப்பட வேண்டும் என்பது அரசின் நோக்கம். விவசாயிகள் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நகர்ப்புற பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். வேகமாக வளரும் சேலம், ஓசூர் போன்ற நகரங்களில் குப்பைகளை விரைந்து அகற்றுதல், பழுதான சாலைகளை சீர் செய்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என்றார்.
ஆதிதிராவிடர் உள்பட விளிம்பு நிலை மக்களுக்கான நடவடிக்கைகளுக்கு மிகுந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஊடகங்களில் வெளியாகும் குறை தொடர்பான செய்திகளை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பல்வேறு கோரிக்கைகளுக்காக வரும் பொதுமக்களை கனிவாக நடத்த வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருவோருக்கு உதவ ஆட்களை நியமிக்க வேண்டும். காவல்நிலையத்தில் வரவேற்பு அலுவலர் இருப்பது பாராட்டுக்குரியது. அரசுத் திட்டங்களை காலத்தே கொண்டு சேர்க்க செயலாற்ற வேண்டும். மக்கள் வழங்கும் மனுக்களை காகிதமாக பார்க்காமல் அவர்களின் வாழ்வாதாரமாக பார்த்து நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர்கள் மற்றும் பல்வேறு துறைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு... கண்ணீர் விட்டு கதறி அழுத பாஜக நிர்வாகி!

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!

புகழ்பெற்ற டோரேமான் கார்ட்டூன் தொடரின் இயக்குநர் ஷிபயாமா காலமானார்!

"வெறுப்பு அரசியல் என்ற முள்ளை எடுக்கும் மலர்": சா.பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்
வீடியோக்கள்

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

"வெறுப்பு அரசியல் என்ற முள்ளை எடுக்கும் மலர்": சா.பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்
தினமணி வீடியோ செய்தி...

DMK vs CPIM: தொகுதிப் பங்கீட்டில் நடப்பது என்ன?
தினமணி வீடியோ செய்தி...

"இதழியல் வரலாற்றில் மைல்கல் ஈகைப் பெருநாள் மலர்": டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
தினமணி வீடியோ செய்தி...

