மதுரையில் ரயில் பாதை பணிகள்: ரயில்கள் ரத்து, மாற்றங்கள்! - முழு விவரம்

மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட, பகுதியாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் முழு விவரம்...
மதுரையில் ரயில் பாதை பணிகள்: ரயில்கள் ரத்து, மாற்றங்கள்! - முழு விவரம்

பயணிகளின் வசதிக்காக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரயில்கள் இயக்கவும் மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

மார்ச் 7 வரை பாலக்காடு - திருச்செந்தூர்  விரைவு ரயில் (16731), மார்ச் 6 வரை திருச்செந்தூர் - பாலக்காடு  விரைவு ரயில் (16732),

மதுரை - ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில்கள் (06651/06652, 06653/06654, 06655/06656), திண்டுக்கல் - மதுரை - திண்டுக்கல் சிறப்பு ரயில்கள் (06609/06610),

மார்ச் 7 வரை தேனி - மதுரை சிறப்பு ரயில் (06702), மார்ச் 7 வரை மதுரை - தேனி சிறப்பு ரயில் (06701),

மார்ச் 6 வரை செங்கோட்டை - மதுரை சிறப்பு ரயில் (06664), செங்கோட்டை - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06648), திருநெல்வேலி - செங்கோட்டை சிறப்பு ரயில் (06687),  மார்ச் 7 வரை மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் (06663),

பிப்ரவரி 17, 19, 23, 24, 26, மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780), பிப்ரவரி 17, 18, 20, 24, 25, 27, மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருப்பதி - ராமேஸ்வரம் விரைவு ரயில் (16779),

பிப்ரவரி 18, 25 மார்ச் 1, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - கன்னியாகுமரி விரைவு ரயில் (22621), பிப்ரவரி 16, 23 மார்ச் 2, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ராமேஸ்வரம் விரைவு ரயில் (22622),

பிப்ரவரி 17, 20, 21, 23, 24, 27, 28 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605), பிப்ரவரி 17, 18, 21, 22, 24, 25, 28 மார்ச் 1, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய காரைக்குடி - சென்னை பல்லவன் விரைவு ரயில் (12606),

பிப்ரவரி 18, 23, 25 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை சென்னை மஹால் விரைவு ரயில் (22624), பிப்ரவரி 17, 19, 24, 26 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - மதுரை மஹால் விரைவு ரயில் (22623),

பிப்ரவரி 22, 24, 27 மார்ச் 1, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மதுரை விரைவு ரயில் (20601), பிப்ரவரி 23, 26, 28 மார்ச் 2, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்  விரைவு ரயில் (20602),

பிப்ரவரி 26-ல் புறப்பட வேண்டிய புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில் (16861), பிப்ரவரி 27-ல் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயில் (16862),

பிப்ரவரி 27, மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் (22657), பிப்ரவரி 28, மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரயில் (22658),

மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - கோயம்புத்தூர் விரைவு ரயில் (22667), பிப்ரவரி 28, மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் - நாகர்கோவில் விரைவு ரயில் (22628),

மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில்கள் (22627/22628),

மார்ச் 1, 2 ஆகிய நாட்கள் புறப்பட வேண்டிய பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயில் (17235), மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் (17236),

மார்ச் 2 அன்று புறப்பட வேண்டிய சென்னை - நாகர்கோவில்  விரைவு ரயில் (12667),  மார்ச் 3 அன்று புறப்பட வேண்டிய நாகர்கோவில் - சென்னை விரைவு ரயில் (12668),

மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில்கள் (06405/06409),  

மார்ச் 5 அன்று புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் - மதுரை விரைவு ரயில் (16721),  மார்ச் 6 அன்று புறப்பட வேண்டிய மதுரை - கோயம்புத்தூர் விரைவு ரயில் (16722),

மார்ச் 5 அன்று புறப்பட வேண்டிய விழுப்புரம் - மதுரை விரைவு ரயில் (16867), மார்ச் 6 அன்று புறப்பட வேண்டிய மதுரை - விழுப்புரம் ரயில் (16868),

மார்ச் 1, 2, 3, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஈரோடு - திருநெல்வேலி விரைவு ரயில் (16845), மார்ச் 2, 3, 4, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி - ஈரோடு விரைவு ரயில் (16846) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து செய்யப்படும்  ரயில்கள்:

மார்ச் 6 வரை நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில்கள் (16321/16322), விருதுநகர் - கோயம்புத்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 5 வரை சென்னை - மதுரை - சென்னை தேஜஸ் அதிவிரைவு ரயில்கள் (22671/22672) திருச்சி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 4 வரை புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் விரைவு ரயில் (16729) மற்றும் மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய புனலூர் - மதுரை விரைவு ரயில் (16730) ஆகியவை மதுரை - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பிப்ரவரி 17 முதல் மார்ச் 3 வரை மதுரை - சென்னை வைகை விரைவு ரயில் (12636) மற்றும் மார்ச் 2 வரை சென்னை - மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவை கூடல் நகர் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

மார்ச் 3 வரை மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில், மார்ச் 2 வரை  சென்னை - மதுரை பாண்டியன் விரைவு ரயில் (12637) ஆகியவை கூடல் நகர் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பிப்ரவரி 23, மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - பிகானீர் விரைவு ரயில், பிப்ரவரி 19, 26 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய பிகானீர் - மதுரை விரைவு ரயில் (22632) ஆகியவை மதுரை - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பிப்ரவரி 17, 20, 24, 27 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சண்டீகர் - மதுரை விரைவு ரயில் (12688), பிப்ரவரி 19, 22, 26, மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் விரைவு ரயில் (12687) ஆகியவை ஈரோடு - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பிப்ரவரி 21, 23 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நிஜாமுதீன் - மதுரை சம்பர்கிரந்தி விரைவு ரயில் (12652) மற்றும் பிப்ரவரி 19, 21, 26, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - நிஜாமுதீன் சம்பர்கிரந்தி விரைவு ரயில் (12651) ஆகியவை மதுரை - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 28 அன்று புறப்பட வேண்டிய நிஜாமுதீன் - மதுரை சம்பர்க் கிரந்தி விரைவு ரயில் திண்டுக்கல் வரை இயக்கப்படும்.

பிப்ரவரி 28 வரை மற்றும் மார்ச் 3, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா விரைவு ரயில் (16343) மற்றும் மார்ச் 1 வரை மற்றும் மார்ச் 4, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (16344) ஆகியவை மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பிப்ரவரி 18, 25, மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சகுடா - மதுரை விரைவு ரயில் (17615) மற்றும் பிப்ரவரி 12, 19, 26 மார்ச் 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - கச்சகுடா விரைவு ரயில் (17616) ஆகியவை திண்டுக்கல் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பிப்ரவரி 22, மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மும்பை குர்லா - மதுரை விரைவு ரயில் (22101) மற்றும் பிப்ரவரி 17, 24 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - மும்பை குர்லா விரைவு ரயில் (22102) ஆகியவை விழுப்புரம் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (16105) மற்றும் பிப்ரவரி 28 மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் (16105) ஆகியவை திருச்சி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பிப்ரவரி 28, மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மும்பை தாதர் - திருநெல்வேலி விரைவு ரயில் (11021) சேலம் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து.

மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மைசூர் - தூத்துக்குடி விரைவு ரயில் (16236) மற்றும் மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தூத்துக்குடி மைசூர் விரைவு ரயில் ( 16235) ஆகியவை திண்டுக்கல் - தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து.

பிப்ரவரி 21, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஓஹா - ராமேஸ்வரம் விரைவு ரயில் (16734) மற்றும் பிப்ரவரி 17, 24 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - ஓஹா விரைவு ரயில் (16733) ஆகியவை சேலம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து.

பிப்ரவரி 19, 26 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய பனாரஸ் - ராமேஸ்வரம் (22536), பிப்ரவரி 22, மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய  ராமேஸ்வரம் - பனாரஸ்  விரைவு ரயில் (22535), பிப்ரவரி 18, 25 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய அஜ்மீர் - ராமேஸ்வரம் ரயில் (20973) மற்றும் பிப்ரவரி 21, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - அஜ்மீர் விரைவு ரயில் (20974) ஆகியவை விழுப்புரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து.

பிப்ரவரி 20, 27 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய காந்திதாம் - திருநெல்வேலி விரைவு ரயில் (20924) மற்றும் பிப்ரவரி 16, 23 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி - காந்தி தாம் விரைவு ரயில் (20923), பிப்ரவரி 17, 18, 24, 25 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஜாம்நகர் - திருநெல்வேலி ரயில் (19578), பிப்ரவரி 20, 21, 27, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி - ஜாம்நகர் விரைவு ரயில் (19577) ஆகியவை திருவனந்தபுரம் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து.

பிப்ரவரி 24, 25, மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - செங்கோட்டை சிலம்பு ரயில் (20681) மற்றும் பிப்ரவரி 25, 26 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய செங்கோட்டை - சென்னை சிலம்பு ரயில் (20682) ஆகியவை காரைக்குடி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து.

மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் (20691) மற்றும் மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரயில் (20692) ஆகியவை திருச்சி - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து.

மார்ச் 6 அன்று பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) மற்றும் மார்ச் 7 அன்று திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (16732) ஆகியவை திண்டுக்கல் - திருச்செந்தூர் இடையே  பகுதியாக ரத்து. 

மார்ச் 4 வரை கோயம்புத்தூர் - மதுரை விரைவு ரயில் (16721), விழுப்புரம் -மதுரை விரைவு ரயில் (16867) மற்றும் மார்ச் 5 வரை மதுரை -  கோயம்புத்தூர் ரயில் (16722), மதுரை - விழுப்புரம் ரயில் (16868) ஆகியவை திண்டுக்கல் மதுரை இடையே பகுதியாக ரத்து.

மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில் (16847) மற்றும் மார்ச் 2, 3, 4 ஆகிய நாட்களில் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் ஆகியவை திருச்சி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து.

பிப்ரவரி 17 முதல் மார்ச் 6 வரை மதுரை - செங்கோட்டை ரயில் (06504), பிப்ரவரி 16 முதல் மார்ச் 5 வரை செங்கோட்டை - மதுரை ரயில் (06503) ஆகியவை மதுரை - விருதுநகர் இடையே பகுதியாக ரத்து. 

அருப்புக்கோட்டை மானாமதுரை காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்:

பிப்ரவரி 20, 22, 27 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயில் (22621), பிப்ரவரி 19, 21, 26, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ராமேஸ்வரம் ரயில் (22622),

பிப்ரவரி 23 முதல் 28 வரை மற்றும் மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - சென்னை செந்தூர் விரைவு ரயில் (16106), பிப்ரவரி 23 முதல் 27 வரை புறப்பட வேண்டிய சென்னை - திருச்செந்தூர் செந்தூர் விரைவு ரயில் (16105),

பிப்ரவரி 24 அன்று புறப்பட வேண்டிய ஓஹா - தூத்துக்குடி ரயில் (19568) பிப்ரவரி 26 அன்று புறப்பட வேண்டிய தூத்துக்குடி - ஓஹா ரயில் (19567),

மார்ச் 1 வரை  மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில் (16847), மார்ச் 5, 6 ஆகிய நாட்களில் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848),

மார்ச் 5 வரை புறப்பட வேண்டிய குருவாயூர் - சென்னை ரயில் (16128), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - குருவாயூர் ரயில் (16127),

பிப்ரவரி 19, 23, 26 மார்ச் 2, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - மும்பை ரயில் (16352), பிப்ரவரி 23, மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஜம்மு ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - திருநெல்வேலி ரயில் (16788),

பிப்ரவரி 18, 25 மார்ச் 4,  5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ஹௌரா ரயில் (12666), பிப்ரவரி 17, 20, 21, 22, 24, 27, 28 மார்ச் 1, 3, 6 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - மும்பை ரயில் (16340),

பிப்ரவரி, 28 மார்ச் 1 ஆகிய நாட்கள் புறப்பட வேண்டிய மும்பை - நாகர்கோவில் ரயில் (16339) பிப்ரவரி 18, 25, மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - கச்சக்குடா ரயில் (16354),

பிப்ரவரி 19, 26 மார்ச் 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சக்குடா - நாகர்கோவில் ரயில் (16353), பிப்ரவரி 23 முதல் மார்ச் 2 வரை புறப்பட வேண்டிய சென்னை - செங்கோட்டை பொதிகை ரயில் (12661), பிப்ரவரி 23 முதல் மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய செங்கோட்டை - சென்னை பொதிகை ரயில் (12661),

பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய திருநெல்வேலி - சென்னை நெல்லை விரைவு ரயில் (12631), மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில் (16232),  

பிப்ரவரி 28, மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை கொல்லம் ரயில் (16101), மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்லம் - சென்னை ரயில் (16102),  

மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்லம் - சென்னை அனந்தபுரி ரயில் (16824),

மார்ச் 1 அன்று புறப்பட வேண்டிய திருநெல்வேலி - மும்பை தாதர் ரயில் (22630) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com