
நாமக்கல்: கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு முன்னாள் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காந்திபுரம் கிழக்கு வீதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சின்னத்தம்பி என்பவரது மகன் கதிரவன்(52). இந்திய ஆட்சிப் பணியில் இருந்த அவர் கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் பொறுப்பை வகித்துள்ளார்.
மேலும் சேலம் சேகோசர்வ் நிர்வாக இயக்குனர், சேலம் மாக்னசைட் நிர்வாக இயக்குனர் பதவிகளையும் வகித்துள்ளார்.
அண்மையில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை அவர் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.
அவருடைய உடல் சென்னையில் இருந்து சேந்தமங்கலத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலிக்கு பின் காந்திபுரத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என அவருடைய குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.