விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். இங்கு பாலியல் அத்துமீறல், துன்புறுத்துதல், முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார் வந்தது.
சமீபத்தில் அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த முதியவர் ஜபருல்லாவை காணவில்லை என அவரது மகன் புகார் கொடுக்க, காப்பகத்தினர் மழுப்பான பதிலைத் தெரிவித்துள்ளனர். ஜபருல்லாவை மீட்டுத் தரக்கோரி நீதிமன்றத்தில் மகன் ஆட்கொணர்வு மனு அளித்துள்ளார். அதன்படி அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டு, இது தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்த நிலையில், அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செல்போன் ரீ-சார்ஜ் திட்டங்கள் 30 நாள்களாக அதிகரிக்குமா?

என்ன செய்தார் பெரியார்? - Seeman சர்ச்சைப் பேச்சு! | TN election 2026 | NTK

வீரமகா காளியம்மன் கோயிலில் காளி திருநடனம்!

த்ரிஷ்யம் - 3 புதிய வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

என்ன செய்தார் பெரியார்? - Seeman சர்ச்சைப் பேச்சு! | TN election 2026 | NTK
தினமணி வீடியோ செய்தி...

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

