பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆளுநரை இன்று சந்திக்கிறார் அண்ணாமலை?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

News image
Updated On :21 பிப்ரவரி 2023, 11:28 am

DIN

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்த ராணுவ வீருக்கும் திமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ராணுவ வீரர் பிரபு மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி இன்று நடைபெறுகிறது. பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். சென்னை சிவானந்தா சாலையில் இருந்து போர் வீரர்கள் நினைவிடம் நோக்கி பேரணி நடைபெற உள்ளது. 

இதைத் தொடர்ந்து ராணுவ வீரர் படுகொலை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.