திருக்கோயில்களின் மூலம் நடத்தப்படும் திருமணங்களுக்கு செலவினத் தொகை உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

திருக்கோயில்களின் மூலம் நடத்தப்படும் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்ட செலவினத் தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
திருக்கோயில்களின் மூலம் நடத்தப்படும் திருமணங்களுக்கு செலவினத் தொகை உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

திருக்கோயில்களின் மூலம் நடத்தப்படும் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்ட செலவினத் தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் திருமணங்களில் ஒரு இணை திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவினத் தொகை ரூ. 20 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 2022-23 மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி 20 மண்டலங்களில் 500 இணைகளுக்கு திருமணம் நடத்திட திருக்கோயில் நிதியின் மூலம் மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளதாகvஉம், இந்த செலவினத் தொகையில் திருமாங்கல்யம் 4 கிராம், மணமக்கள் ஆடைகள், மாலைகள், புஷ்பம், மணமக்கள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு, சீர்வரிசை பொருள்களாக பீரோ, கட்டில்,மெத்தை, தலையணைகள், பாய், கைக்கடிகாரங்கள், மிக்ஸி, சமையல் பாத்திரங்கள் மற்றும் பூஜைப் பொருள்கள் அடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com