நெல் கொள்முதல்: ஈரப்பத அளவை 20%-ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் ஏற்கெனவே 19% ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதலுக்கு அனுமதி உள்ள நிலையில் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவு 20%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மத்தியக் குழு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com