தூத்துக்குடியில் வழக்குரைஞர்கள் சாலை மறியல் போராட்டம்

தூத்துக்குடியில் வழக்குரைஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தூத்துக்குடியில் வழக்குரைஞர்கள் சாலை மறியல் போராட்டம்

தூத்துக்குடியில் வழக்குரைஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு மகன் முத்துக்குமார் (43). வழக்குரைஞரான இவர், நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், வழக்குரைஞர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், வழக்குரைஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், தூத்துக்குடி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், நீதிமன்றம் முன்பு பாளையங்கோட்டை சாலையில் வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் வரை தொடர் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக வழக்குரைஞர் சங்க தலைவர் ஜோசப் செங்குட்டுவன் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில்,  வழக்குரைஞர் சங்க துணைத் தலைவர் செல்வின் பர்ணாந்து, செயலர் மார்க், வழக்குரைஞர்கள் யு.எஸ்.சேகர், சுரேஷ்குமார், அதிசயகுமார், மாடசாமி, எஸ்.எஸ்.பி அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com