இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

டிவி சேனல் கட்டண உயர்வு: தூத்துக்குடியில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

டிவி சேனல்களில் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடியில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 12:05 pm IST

தூத்துக்குடி: டிவி சேனல்களில் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடியில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டண தொலைக்காட்சி சேனல்களின் விலையை உயர்த்திக்கொள்ள  தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.  இதன் காரணமாக வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் கேபிள் டிவி மாத கட்டணம் சுமார் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை உயரும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. 

எனவே விலை ஏற்றத்தை திரும்பப் பெறக் கோரி  தூத்துக்குடி மாவட்ட தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரபு தலைமை வகித்தார். பொருளாளர் ராஜூ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சேனல்கள் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என முழக்கங்கள்  எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலர் கண்ணன் மற்றும் மாவட்டத்தில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.