வேங்கைவயல் விவகாரம்: சிபிஐ-க்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வேங்கைவயல் கிராம குடிநீர்த் தொட்டி
வேங்கைவயல் கிராம குடிநீர்த் தொட்டி

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடா் குடியிருப்பு மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனித கழிவுநீர் கலக்கப்பட்ட விவகாரம் பேசுபொருளானது. 

இந்த விவகாரத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வேங்கைவயல் கிராமம், ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களிடம் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ அல்லது  சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றக்கோரியும் சம்பவத்தை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com