ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குரூப் 2 பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும்: டிஎன்பிஎஸ்சி

தமிழகம் முழுவதும் குரூப் 2 பிரதான தோ்வு இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2023, 6:50 am

DIN

குரூப் 2 பிரதான தோ்வு இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பிரதான தோ்வு இன்று காலை தொடங்கி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆனால், சில மையங்களில் தேர்வர்களின் பதிவு எண்களில் குளறுபடி இருந்ததால் சரியான நேரத்தில் தொடங்க முடியவில்லை.

பதிவு எண்கள் சரிசெய்யப்பட்ட பிறகு தேர்வு தொடங்கியதால், தேர்வு தொடங்கியதில் இருந்து 3 மணிநேரம் கணக்கில் கொள்ளப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில், பிற்பகல் 2 மணிக்கு தொடங்க இருந்த பொது அறிவு, பாடங்கள் தொடர்பான தோ்வு 30 நிமிடங்கள் தாமதமாக 2.30 மணிக்கு தொடங்கும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.

மொத்தம் 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. பிரதானத் தோ்வை 55 ஆயிரத்து 71 போ் எழுதுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.