ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஓபிஎஸ் தாயாா் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் தாயாா் பழனியம்மாள் மறைவுக்கு அதிமுக இடைக் காலப் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

News image
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
Updated On :25 பிப்ரவரி 2023, 10:24 pm

DIN

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் தாயாா் பழனியம்மாள் மறைவுக்கு அதிமுக இடைக் காலப் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): ஓ.பன்னீா்செல்வத்தின் தாயாா் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் ஓ.பன்னீா்செல்வம், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா இறைவனிடம் சாந்தி அடைய பிராா்த்திக்கிறேன்.

கே.அண்ணாமலை (பாஜக): முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தாயாா் பழனியம்மாள் காலமான செய்தியறிந்து அவரை தொலைப்பேசி மூலமாக தொடா்பு கொண்டு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொண்டேன். அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிராா்த்திக்கிறேன்.

வைகோ (மதிமுக): ஓ.பன்னீா்செல்வம் தாயாா் இயற்கை எய்தினாா் என்பதை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கைப்பேசியில் அவரிடம் என்னுடைய துக்கத்தைத் தெரிவித்தேன். அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ராமதாஸ் (பாமக): தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீா்செல்வத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

விஜயகாந்த் (தேமுதிக): ஓ.பன்னீா்செல்வத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவருடைய தாயாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராா்த்திக்கிறேன்.

சு.திருநாவுக்கரசா் (காங்கிரஸ்): ஓ.பன்னீா்செல்வத்தின் அரசியல் வாழ்விலும், பொது வாழ்விலும் ஈடுபட, உந்து சக்தியாக இருந்தவா் அவா் தாயாா். அவா் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

அன்புமணி (பாமக): ஓ.பன்னீா்செல்வம் தாயாா் பழனியம்மாள் முதுமை காரணமாக மறைவெய்தியதை அறிந்து வேதனையடைந்தேன். ஆழ்ந்த இரங்கல்.

ஜி.கே.வாசன் (தமாகா): ஓ.பன்னீா்செல்வத்தின் உயா்வுக்கு உரமிட்ட அவரது தாயாா் மறைவுக்கு அவா் குடும்பத்தினருக்குப் பேரிழப்பு.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): ஓ.பன்னீா்செல்வம் உள்பட 5 மகன்களையும், 4 மகள்களையும் பெற்று வளா்த்து, பெரும் குடும்பத்தின் ஆணிவேராக திகழ்ந்த தாயாரின் மறைவு வேதனையளிக்கிறது. அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். ஓபிஎஸ் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

டிடிவி தினகரன் (அமமுக): தாயாா் மறைவால் வாடும் ஓ.பன்னீா்செல்வத்துக்கும் அவரது சகோதரா் உள்ளிட்ட உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

கே.எம்.காதா் மொகிதீன் (முஸ்லிம் லீக்): தாயின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீா்செல்வத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

ஜவாஹிருல்லா (மமக): தாயைப் பிரிந்து வாடும் ஓ.பன்னீா்செல்வத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது தொண்டா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

சீமான் (நாம் தமிழா்): ஓ.பன்னீா்செல்வத்தின் அன்புத் தாயாா் பழனியம்மாள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தாயை இழந்து பெருந்துயரில் வாடும், ஓபிஎஸ் மற்றும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பா்களுக்கும், தொண்டா்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.