இந்த விழாவில் சங்கத்தின் முதல் நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். அதன்படி சங்க தலைமை புரவலர் டி.ஜெ.சீனிவாச ராவ், சங்க தலைவர் ஜி.சந்தோஷ் காந்தி, துணைத் தலைவர்கள் மருத்துவர் எம்.பிரகாஷ், கே.ஆர்.நாராயண மூர்த்தி, டி.கே. குமார், எம். லட்சுமணன், கே.நடராஜன், செயலாளர் எஸ்.செல்வகுமார், துணைச் செயலாளர்கள் டி.எபினேசர், எஸ்.பாஸ்கர், பொருளாளர் கே.ஜெயகுமார், செயற்குழு உறுப்பினர்கள் டி.தேவா அன்பு, எஸ்.கணபதி, வி.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர். அப்போது சங்கத்தின் முதல் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.