அண்ணாமலை
அண்ணாமலை

பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை? திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்குப்  பாலியியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Published on

விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்குப்  பாலியியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம்.

மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com