புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பள்ளி மேலாண்மைக்குழு மூலம் ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக் கல்வித் துறை

பள்ளி மேலாண்மைக்குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜனவரி 2023, 3:44 pm

DIN


பள்ளி மேலாண்மைக்குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 

தற்காலிக ஆசிரியர்கள் தேவையுள்ள பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் இந்த கல்வியாண்டு முடியும் வரை, அதாவது ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களை பணி அமர்த்தலாம்.

இந்த பணியினை வருகிற 9-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு பணியமர்த்தும்போது கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

1. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தகுதியுடையவராக இருப்பின் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

2. பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000-ம் மதிப்பூதியம் வழங்கப்படும்.

3. இல்லம் தேடி கல்வி பணிடிகளில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியர்கள் தங்கள் பணியை முடித்து எப்போது பள்ளிக்கு திரும்பினாலும், பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக பணிவிடுப்பு செய்யப்பட வேண்டும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.