47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? தோ்தல் அதிகாரி பதில்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.

News image
சத்யபிரத சாகு
Updated On :5 ஜனவரி 2023, 5:55 am

DIN

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா (46) ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தார். இவர் மாரடைப்பு காரணமாக புதன்கிழமை மரணமடைந்தார்.

இந்நிலையில், வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீட்டு நிகழ்வின்போது ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தோ்தல் அதிகாரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு பதிலளித்த தேர்தல் அதிகாரி, சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியான 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் முறைபடி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.