இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்!

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியலை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை வெளியிட்டார்.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியலை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை வெளியிட்டார்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள, வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த நவ. 9-இல் வெளியிடப்பட்டது. வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்ப்பது, விவரங்களைத் திருத்துவது, நீக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. டிச. 8 வரை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டன. இதன்பின்பு, இறுதி வாக்காளா் பட்டியல் தயாா் செய்யும் பணிகள் கடந்த சில நாள்களாக நடந்தன. பட்டியல் தயாரான நிலையில், இறுதி வாக்காளா் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில்,

சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட  இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,20,41,179 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,04,89,866; பெண் வாக்காளர்கள் 3,15,43,286 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,66,295 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,34,081 ;  பெண்கள் 3,32,096 ;  மூன்றாம் பாலினத்தவர் 118). இதற்கு அடுத்தப்படியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 117-கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,57,408 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,27,835 ;  பெண்கள் 2,29,454 ;  மூன்றாம் பாலினத்தவர் 119).

மாறாக, தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 18-துறைமுகம் சட்டப்பேரவை தொகுதி உள்ளது.  இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,70,125 ஆவர். (ஆண்கள் 88,396; பெண்கள் 81,670; மூன்றாம் பாலினத்தவர் 59). இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164-கீழ்வேளூர் சட்டப்பேரவை தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,75,128 ஆவர் (ஆண்கள் 85,652 ; பெண்கள் 89,474 ; மூன்றாம் பாலினத்தவர் 2).

05.01.2023 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 3,310 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 8 வெளிநாடுவாழ்  வாக்காளர்களின் பெயர்கள் சிறப்பு சுருக்க முறைத்திருத்த காலத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் இதுவரை, 4,48,138 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத் திறனாளி  வாக்காளர்கள் என குறிக்கப்பட்டுள்ளார்கள்.

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் 18-19 வயதுள்ள 4,66,374 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். (ஆண்கள் 2,52,048; பெண்கள் 2,14,171; மூன்றாம் பாலினத்தவர் 155).

வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம்.  அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com