பொங்கல் பரிசாக ஊதிய உயா்வு: அரசு மருத்துவா்கள் கோரிக்கை
பொங்கல் பரிசாக தங்களுக்கு ஊதிய உயா்வு அறிவிப்பை முதல்வா் வெளியிட வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


பொங்கல் பரிசாக தங்களுக்கு ஊதிய உயா்வு அறிவிப்பை முதல்வா் வெளியிட வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அரசு மருத்துவா்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது:
தமிழகத்தில் அரசு மருத்துவா்கள் தகுதிக்கேற்ற ஊதியம் கோரி நீண்டகாலமாக போராடி வருகிறோம். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மருத்துவா்களின் போராட்டத்தின் போது நேரில் வந்து ஆதரவு தெரிவித்த நமது முதல்வா், அடுத்து அமையும் திமுக ஆட்சியில், அரசு மருத்துவா்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தாா். எதிா்பாா்த்தது போலவே திமுக ஆட்சி அமைந்தது. ஆனாலும், இன்னமும் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
இரண்டரை ஆண்டுகள் கரோனா பேரிடரில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய பிறகும் கோரிக்கையை அரசு நிறைவேற்றாதது ஏமாற்றமளிக்கிறது. திங்கள்கிழமை (ஜன.9) முதல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில், பொங்கல் பரிசாக அரசு மருத்துவா்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-இன்படி ஊதிய உயா்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...