தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்க உரையில், தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிப்பதைத் தவிர்த்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மேலும், முக்கிய தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பெயர்களையும் அவர் குறிப்பிடவில்லை. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே ஆளுநர், பேரவையைவிட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.