காரைக்கால் வந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவருடன் விவசாயிகள் சந்திப்பு

காரைக்காலுக்கு வந்துள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவரை, விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்தனர்.
காரைக்கால் வந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவருடன் விவசாயிகள் சந்திப்பு

காரைக்காலுக்கு வந்துள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவரை, விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்தனர்.

புது தில்லியிலிருந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் புதுச்சேரிக்கு திங்கள்கிழமை வருகைதந்து அமைச்சர், அதிகாரிகளுடன் காரைக்காலுக்கு வழங்கவேண்டிய நதி நீர் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்திவிட்டு இரவு காரைக்கால் வந்தார். 

மத்திய நீர்வள ஆணையத்தின் பராமரிப்பில் உள்ள 7 ஆறுகளின் நதிநீர் பங்கீடு அளவீட்டு இடங்களை, புதுவை மாநில  எல்லைக்குள் மாற்றியமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் வகையில் திட்டங்களை, ஆய்வு செய்யும் வகையில் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை பணிகளை மேற்கொண்டார். முன்னதாக விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அகில இந்திய விவசாயிகள் சங்கம், காரை பிரதேச விவசாயிகள் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் சந்தித்தனர். 

மழைக்காலத்தில் மட்டுமே காரைக்காலுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கிறது. பற்றாக்குறை காலத்தில் காரைக்காலுக்கு நீர் கிடைப்பதில்லை. 

காரைக்காலுக்குரிய 7 டிஎம்சி காவிரி  நீரை உரிய காலத்தில் காரைக்கால் பகுதியிலேயே அளவிட்டு தரவேண்டும். காரைக்காலுக்குள் தண்ணீர் வரத்தை கண்காணிப்பு செய்ய விவசாயிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். நிலத்தடி நீரை பெருக்க உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். உற்பத்தி செய்த நெல்லை மத்திய அரசு ஆதார விலைப்படி அரசே கொள்முதல் செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.

விவசாயிகள் சந்திப்பு நிறைவில் காரைக்கால் மாவட்டத்தின் எல்லைப்புறத்தில்  உள்ள ஆறுகளின் நிலையை ஆய்வு செய்ய ஆணையத் தலைவர் செல்லவுள்ளார். மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர் மற்றும் புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வி.சத்தியமூர்த்தி, கண்காணிப்புப்  பொறியாளர் ஏ.ராஜசேகரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com