கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பொங்கல் திருநாளில் வங்கித் தேர்வு: சு.வெங்கடேசன் போராட்டத்திற்கு திருமாவளவன், தமிழச்சி தங்கபாண்டியன் நேரில் ஆதரவு

பொங்கல் திருநாளில் வங்கித்தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்பி சு.வெங்கடேசனுக்கு எம்பிக்கள் திருமாவளவன், தமிழச்சி தங்கபாண்டியன் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 11:47 am

DIN

பொங்கல் திருநாளில் வங்கித்தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்பி சு.வெங்கடேசனுக்கு எம்பிக்கள் திருமாவளவன், தமிழச்சி தங்கபாண்டியன் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாரத ஸ்டேட் பாங்க் கிளர்க் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியானது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை (ஜனவரி 17) அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தேர்வு தேதியை மாற்றக்கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் வாயிலாக வலியுறுத்தியிருந்தார். 

Story image

எனினும் வங்கி தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் தேர்வு தேதியினை மாற்றிடக்கோரி வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் எஸ்பிஐ வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

மேலும், எஸ்பிஐ வங்கியின் பொது மேலாளர் அறையில் சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். உடன் வடசென்னை மாவட்ட செயலாளர் எல். சுந்தர்ராஜன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் உள்ளனர்.

Story image

இந்நிலையில் எம்பி சு.வெங்கடேசன் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேரில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேபோன்று திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.