தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஜி-20 மாநாடு: சென்னையில் ஜன.31 முதல் பிப்.2 வரை கூட்டம்

ஜி-20 மாநாட்டையொட்டி சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை முதலாவது கல்விக்குழு கூட்டம் நடக்கின்றன. 

News image
Updated On :16 ஜனவரி 2023, 5:38 am


ஜி-20 மாநாட்டையொட்டி சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை முதலாவது கல்விக்குழு கூட்டம் நடக்கின்றன. 

கடந்த டிசம்பா் 1ஆம் தேதி ஜி- 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா முறைப்படி ஏற்றது. இந்த ஜி-20 நாடுகளின் பல்வேறு அரசுகளின் தலைவா்கள் பங்கேற்கும் அடுத்த உச்சி மாநாடு அடுத்த ஆண்டு புது தில்லியில் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.  இந்த உச்சி மாநாட்டுக்கு ஒரு லட்சம் விருந்தினா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 

இந்த ஜி 20 மாநாட்டுக்காக நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. 

இந்த நிலையில் ஜி 20 மாநாட்டையொட்டி சென்னையில் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 2 வரை முதலாவது கல்விக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜி 20 என்பது உலகின் வளா்ந்த மற்றும் வளா்ந்து வரும் பொருளாதார அரசுகள் கொண்ட ஒரு குழுவாகும். இந்த ஜி 20 அமைப்பில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 

இந்த 20 நாடுகளும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதத்தை கொண்டுள்ளன. அதேபோன்று உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு மடங்கும், பன்னாட்டு வா்த்தகத்தில் 75 சதவீதத்தையும் இந்த ஜி 20 நாடுகள் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.