சூரியூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண வந்தவர் காளை முட்டியதில் பலி; 4 பேர் காயம்
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண வந்த இளைஞர் காளை முட்டியதில் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.


திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண வந்த இளைஞர் காளை முட்டியதில் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.
இதையும் படிக்க.. பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் 9 காளைகளை அடக்கிய இளைஞர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் (29) என்ற இளைஞரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண வந்திருந்தார். வாடிவாசலை விட்டு வெளியே வந்த காளை ஒன்று மாடு பிடி களத்தை கடந்து வெளியே ஓடி வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அரவிந்தை அந்தக் காளை முட்டி கீழே தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதே போல மற்றொரு மாடு வேகமாக ஓடி வந்ததைக் கண்ட இளைஞர்கள் சிலர் காளையிடம் சிக்காமல் தப்புவதற்காக ஓடினர். இதில் தவறி விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...