கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் பி. காசியண்ணன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் பதவியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புடன் செயல்பட்டவர். விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்காக சீரிய முறையில் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிக் கண்டவர்.
கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் நடத்திய பல்வேறு போராட்டங்கள், இயக்கங்களில் தன்னையும் இணைத்து கொண்டு ஒன்றுபட்ட போராட்டங்களிலும் பங்கெடுத்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும், கட்சித் தோழர்கள் மீதும் அன்பான உறவை பேணிக்காத்து வந்தவர். தனது உடல்நலம் பாதிக்கப்பட்ட போதிலும் அதைப்பற்றியெல்லாம் கவலையில்லாமல் சமீபத்தில் பால் உற்பத்தியாளர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்ட குணத்தை வெளிப்படுத்தியவர்.
8ம் வகுப்பு வரை படித்த அவர், ஏழை, எளிய வீட்டு குழந்தைகள் கல்வி பெற வேண்டுமென சீரிய நோக்கத்தோடு கல்வி அறக்கட்டளையை நிறுவி கல்விச் சேவையை புரிந்து வந்தவர். வசதி வாய்ப்புகள் இருப்பினும் மிகவும் சாதாரண முறையில் அனைவரிடமும் அன்போடு, பண்போடும் பழகும் குணம் படைத்தவர்.
தனது இறுதி மூச்சுவரை விவசாயிகளுக்காகவும், ஏழை, எளிய மக்களுக்காகவும் போராடியவர். அவரது மறைவு விவசாயிகள் இயக்கத்திற்கும், தமிழ்நாடு விவசாயிகளுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் உறவினர்கள், விவசாய பெருங்குடி மக்கள், தோழர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஓராண்டில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டெல் நிறுவனம்!

விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளியை அடையாளம் காட்டிய நகக்கீறல்!

சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர்!

கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்தது ஐபிஎல் 2026க்கு உதவும்: பட்லர்
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

