வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக-பாஜக நாளை பேச்சுவார்த்தை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக-பாஜக இடையே நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது.

News image
Updated On :20 ஜனவரி 2023, 2:31 pm

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக-பாஜக இடையே நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் மாா்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அதிமுகவே போட்டியிடும் சூழல் உள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக-பாஜக இடையே நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது. 

நாளை மாலை 4 மணிக்கு பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.