அனுமதியின்றி மதுரை மாவட்டத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளை திரையிட்ட 34 திரையரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் ஜன.11இல் திரையரங்குகளில் வெளியானது. குறிப்பாக, துணிவு நள்ளிரவு 1மணிக்கு வெளியானதால் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் முந்தியடித்துக் கொண்டு குவிந்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிக்க- இடைத்தேர்தல்: ஓபிஎஸ் நாளை முக்கிய அறிவிப்பு
ரசிகர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் குவிந்ததால் பொதுச்சொத்துக்களுக்கு சேதங்களும் ஏற்பட்டன. மேலும், ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இரண்டு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு உலகளவில் நல்ல வசூலையும் பெற்றுத் தந்துள்ளன.
இந்த நிலையில், அனுமதியின்றி மதுரை மாவட்டத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளை திரையிட்ட 34 திரையரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


