வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இடைத்தேர்தலில் ஆதரவு: அண்ணாமலையுடன் அதிமுகவினர் சந்திப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்கக் கோரி அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.

News image
அண்ணாமலை
Updated On :21 ஜனவரி 2023, 11:44 am

DIN

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்கக் கோரி அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக போட்டியிடப் போவது உறுதியாகி வருகிறது. கடந்த சட்டப்பேரவை பொதுத் தோ்தலின்போது தமாகா போட்டியிட்டு தோல்வி அடைந்த தொகுதியாகும். இந்த முறை அதிமுக நிற்பதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையை அதிமுக குழு சனிக்கிழமை சந்தித்துப் பேசி வருகிறது. இந்த சந்திப்பின்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜகவின் ஆதரவை அக்குழுவினா் கோர உள்ளனா்.

இந்த சந்திப்பில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள பாஜக அலுவலகம் வந்துள்னர்.

அதிமுக நிர்வாகிகளுடன் நடைபெறும் சந்திப்பில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் துரைசாமி, நாகராஜன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-இல் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த முறை அதிமுக கூட்டணி சாா்பில் தமாகா போட்டியிட்டு தோல்வி அடைந்தது. இடைத்தோ்தலிலும் தமாகா போட்டியிடுமா என்கிற கேள்வி இருந்து வந்தது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தலைமையிலான குழுவினா் ஜி.கே.வாசனை வியாழக்கிழமை (ஜன. 19) சந்தித்து, அங்கு அதிமுக போட்டியிட வேண்டிய நிலை குறித்து தெரிவித்தனா்.

இதையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் அதிமுக போட்டியிடும் என்றும், அக்கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஒப்புக் கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.