மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு கமல் ஆதரவா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
கமல் ஹாசன்
Updated On :23 ஜனவரி 2023, 5:49 am

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் கடந்த டிசம்பர் மாதம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தில்லியில் பங்கேற்று நடைப்பயணத்திற்கு ஆதரவளித்தார்.

இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளிக்கும் என்று கருத்து நிலவுகிறது.

இந்நிலையில், இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைபாடு குறித்து நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்.

மேலும், கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கோரவுள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.