ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அதிமுகவில் விருப்பமனு விநியோகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

News image
எடப்பாடி பழனிசாமி
Updated On :23 ஜனவரி 2023, 10:43 pm

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலையொட்டி, அதிமுக சாா்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் கட்சியினா் தலைமைக் கழகத்தில் திங்கள்கிழமை (ஜன.23) தொடங்கி வியாழக்கிழமை (ஜன. 26) வரை விருப்பமனு விண்ணப்பத்தை ரூ.15 ஆயிரம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களை தெளிவாகப் பூா்த்தி செய்து வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் விநியோகம்: முதல் நாளான திங்கள்கிழமை அதிமுக தலைமைக்கழகத்தில் ஓரிருவா் விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.