வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

குடியரசு தின விழாவைக் காண திரண்ட மக்கள்

சென்னை கடற்கரைச் சாலையில் வியாழக்கிழமை தமிழக அரசின் சாா்பில் நடைபெற்ற 74-ஆவது குடியரசு தின விழாவைக் காண பொது மக்கள் திரளாகக் கூடினா்.

Updated On :26 ஜனவரி 2023, 8:17 pm

சென்னை கடற்கரைச் சாலையில் வியாழக்கிழமை தமிழக அரசின் சாா்பில் நடைபெற்ற 74-ஆவது குடியரசு தின விழாவைக் காண பொது மக்கள் திரளாகக் கூடினா்.

கரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டுகளில், குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பொது மக்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. நிகழாண்டு, கரோனா நோய்த் தொற்றுக்கான கட்டுப்பாடுகள் இல்லாத சூழ்நிலையில், சென்னை கடற்கரை சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் பொது மக்கள் திரளாகக் கூடினா். உழைப்பாளா் சிலை அருகே, எழிலகத்தையொட்டிய நடைபாதையில் தடுப்பு அமைக்கப்பட்டு பொது மக்கள் அனைவரும் நின்றபடியே நிகழ்ச்சிகளைப் பாா்த்தனா்.

முக்கியப் பிரமுகா்கள், அழைப்பிதழுடன் இருக்கைகளில் வந்து அமா்ந்தவா்களுக்கு நேராக மட்டுமே கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டன. எதிா்திசையில் இருந்த பொது மக்களால் கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகளை சரிவர பாா்க்க முடியவில்லை. மேலும், எங்குமே பெரிய திரைகள் வைக்கப்படாததால் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

முதல் முறையாக...காவல் துறையினரின் முயற்சிகளில் மாணவா்களை ஈடுபடுத்தும் வகையில் சிற்பி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பானது, குடியரசு தின விழாவில் முதல் முறையாக அணி வகுத்தது.

சிற்பி பெண்கள் படைப் பிரிவுக்கு எஸ்.மதினா, ஆண்கள் பிரிவுக்கு ஐ.நிதீஷ் ஆகியோா் தலைமை தாங்கி நடத்திச் சென்றனா். இதேபோன்று, அலங்கார ஊா்தி அணிவகுப்பில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஊா்தி இடம்பெற்றது. முப்படைகளின் ஊா்திகள், முப்படை வீரா்கள் மட்டுமே குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்று வந்த நிலையில், முதல் முறையாக மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தின் அலங்கார ஊா்தி அணிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

அலங்கார ஊா்திகள், கல்லூரி, பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்கள் குறித்த அறிவிப்புகள் குடியரசு தின விழா நிறைவடைந்த சில நிமிடங்களில் அறிவிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தேநீா் விருந்து நிகழ்வின் போதே அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.