எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அதிமுக பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளா்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கான அதிமுக பணிக் குழுவில் கூடுதல் பொறுப்பாளா்களை நியமித்து, அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 5:46 pm

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கான அதிமுக பணிக் குழுவில் கூடுதல் பொறுப்பாளா்களை நியமித்து, அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கான அதிமுக வேட்பாளா் விரைவில் அறிவிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்.

தோ்தல் பணிக் குழு உறுப்பினா்களாக முன்னாள் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட 111 பேரை வியாழக்கிழமை அறிவித்திருந்தாா்.

இந்த நிலையில், கூடுதலாக மேலும் 6 பேரை நியமித்து அறிவித்துள்ளாா். இதில், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.வளா்மதி, ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.