சென்னையிலும் நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர்  வருகிற பிப்.2 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் உணவு பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் கோ.ஜெயச்சந்திரராஜா.
சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் கோ.ஜெயச்சந்திரராஜா.

சிதம்பரம்: நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற பிப்.2 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் உணவு பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதுகுறித்து சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் கோ.ஜெயச்சந்திரராஜா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தது: 

நியாயவிலைக்கடைகளுக்கு 4ஜி விற்பனை முனையம் மற்றும் 4ஜி சிம்கார்டுகள் வழங்க வேண்டும், மகளிர் நியாயவிலைக்கடை, மகளிர் சுய உதவிக்குழு நியாயவிலைக்கடைகளை அரசே ஏற்று நடத்தி அப்பணியாளர்களுக்கு ஊதியம் வவங்க வேண்டும். சிறப்பாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையானது குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.10 வழங்க வேண்டும், எடையாளர்களிலிருந்து விற்பனையாளர் பதவி உயர்வும், விற்பனையாளர்களிலிருந்து அலுவலக எழுத்தர் பதவி உயர்வு வழங்க வேண்டும், நியாயவிலைக்கடை பணியாளர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மறைந்த நியாயவிலைக்கடை பணியாளர்கள் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜன.27-ம் தேதி மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் நடத்தினோம். 

இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், வருகிற பிப்.2-ம் தேதி வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகம் மற்றும் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பும் மாநிலம் தழுவிய மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்கும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. எனவே எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com