
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சிகள் கடந்து அனைவரிடத்துலும் நட்பு பாராட்டும் பண்பு கொண்டவர் வெங்கைய நாயுடு. உங்கள் புத்திசாலித்தனமும் வசீகரமும் எப்போதும் பிரகாசமாகனது. இந்த நன்னாளில் நீண்ட ஆயுளும் மகிழ்சியும் கிடைக்க வேண்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு இன்று (ஜூலை 1) தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.