பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவையில் புறா பந்தயம்... ஆர்வமுடன் புறாக்களை பறக்கவிட்ட இளைஞர்கள்.!

கோவை புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் நடைபெற்ற புறா பந்தயத்தில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு புறாக்களை பறக்கவிட்டனர்.

News image
Updated On :2 ஜூலை 2023, 4:39 pm

DIN



கோவை புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் நடைபெற்ற புறா பந்தயத்தில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு புறாக்களை பறக்கவிட்டனர்.

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று புறா பந்தயம் நடைபெற்றது. இதில் புலியகுலம் பகுதியில் கோயமுத்தூர் புலியகுளம் பி.ஜி.என்., பிரண்ட்ஸ் இன் சார்பில் 18 ஆவது ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு நாள் சாதா புறா பந்தயம் தொடங்கியது. 

பந்தயத்தில் கலந்து கொண்ட புறாக்களுக்கு அடையாளமாக சீல் வைக்கப்பட்டது. இதில் 19 கூண்டுகளைச் சேர்ந்தவர்கள் 19 புறாக்களை பறக்கவிட்டனர்.

பறக்க விட்ட புறாக்கள் மாலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் அவரவர் கூண்டுகளில் அமர வேண்டும். இப்படி அமருவதின் அடிப்படையில் புறாக்களுக்கு முதல், இரண்டு மூன்று என பரிசுகள் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.