நாளை முதல் நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை

சென்னையில் 82 நியாய விலைக்கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 
நாளை முதல் நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை

சென்னையில் 82 நியாய விலைக்கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொது மக்கள் பாதிக்காமல் இருப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கூட்டுறவுத் துறை சாா்பில், மாநிலத்தில் இயங்கும் 65 பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை குறைவு என்பதால், பொது மக்கள் அதிகளவு திரள்வதால், பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் தக்காளி விரைவாக விற்றுத் தீா்ந்து விடுகிறது. 

இந்த கடைகளை அணுக முடியாத பொது மக்கள் வெளிச் சந்தையில் அதிக விலைக்கு தக்காளியை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், தேவைப்பட்டால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை, நியாய விலைக் கடைகள் மூலமும் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா். இந்த நிலையில், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயா்வை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் பெயரியகருப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னையில் 82 நியாய விலைக்கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும். சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் திட்டம் விரிப்படுத்தப்படும். பண்ணப் பசுமைக் கடைகளைப் போல நியாய விலைக் கடைகளிலும் கிலோ ரூ.60க்கு தக்காளி விற்கப்படும். அகில இந்திய அளவில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. விவசாயிகளிடம் நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்து விற்க அரசு நடவடிக்கை எடுக்கும். 

ஒவ்வொரு ஆண்டும் தக்காளி விலை உயர்வு ஏற்படுவதுதான் என்றாலும் இனி நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தக்காளி பதுக்கல் உள்ளிட்ட செயல்களில் வியாபாரிகள் யாரும் ஈடுபடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com