சேலம் அணைமேடு ரயில்வே கேட் உடைந்து விழுந்ததால் பரபரப்பு! போக்குவரத்து பாதிப்பு!!
சேலம் அணைமேடு பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங் கேட் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


சேலம் அணைமேடு பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங் கேட் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் அணைமேடு பகுதியில் ரயில்வே கிராசிங் கேட் உள்ளது. இந்த ரயில் வழித்தடத்தில் சேலம் ஜங்ஷனிலிருந்து சென்னை, விருத்தாசலம், ஆத்தூர், காரைக்கால் செல்ல பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் அவ்வப்போது சரக்கு ரயில்களும் இந்த வழியாக செல்கின்றது ரயில்கள் கடக்கின்றபோது லெவல் கிராசிங் கேட் மூடப்படுவது வழக்கம். இந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணியளவில் சேலம் ஜங்ஷனிலிருந்து விருத்தாசலம் வழியாக காரைக்கால் செல்லும் ரயில் வந்தது. அதற்காக லெவல் கிராசிங் போடப்பட்டது.
அதன்பிறகு ரயில் கடந்த பிறகு கேட்டை திறக்கும்பொழுது கிராசிங் கேட் முறிந்து கீழே விழுந்தது. நல்வாய்ப்பாக வாகன ஓட்டிகள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதனை அடுத்து அந்த பாதைகள் அடைக்கப்பட்டு ஆத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்களை மாற்றுப்பாதையில் சேலம் புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு அனுமதித்தனர். இதனால் மாநகரப் பகுதிகளில் முள்வாடி கேட் சுந்தர்லாட்ஜ் ஆட்சியர் அலுவலகம் என பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முறிந்து விழுந்த ரயில்வே கிராசிங் கேட்டை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல அடிக்கடி சேலம் மாநகரப் பகுதிகளில் உள்ள ரயில்வே கிராசிங் கேட் முறிந்து பழுதடைந்து விழுகிறது. இதனால் பொதுமக்கள் ரயில்வே கிராசிங் கேட்டை கடக்கின்றபோது அச்சத்துடனே கடக்கின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே சேலம் ரயில்வே கோட்டம் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...