இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தூத்துக்குடியில் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வீசி வரும் சுழல் காற்று காரணமாக தூத்துக்குடியில் இருந்து மீனவர்கள் 3ஆவது நாளாக வியாழக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

News image
Updated On :6 ஜூலை 2023, 5:13 am

DIN

தூத்துக்குடி: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வீசி வரும் சுழல் காற்று காரணமாக தூத்துக்குடியில் இருந்து மீனவர்கள் 3ஆவது நாளாக வியாழக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

வாங்கக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதியில் சுழல் காற்றானது 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீன்வளத்துறை சார்பில் 3ஆவது நாளாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இதையடுத்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லாததால், அவைகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இதே போன்று இனிகோ நகர் புதிய துறைமுக கடற்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.