காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :7 ஜூலை 2023, 3:49 am

DIN


கோவை: கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தமிழ்நாட்டை சேர்ந்த விஜயகுமார் கடந்த 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல் துறை பணியில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பின்னர், சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி கோவை சரக டிஐஜி ஆக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரையில் சக காவல்துறை அதிகாரிகளுடன் பணி குறித்து பேசியுள்ளார். அதன் பிறகே பந்தய சாலை பகுதியிலுள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

அவரை சக போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை  பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக  தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரது உடல் உடல் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை தற்கொலைக்கான காரணங்கள் வெளிவராத நிலையில், அவரது தற்கொலைக்கு பணிச்சுமையா அல்லது குடும்ப பிரச்னைதான் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது மனைவி மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பல்வேறு வழக்குகளை திறமையாகக் கையாண்டு குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் டிஐஜி விஜயகுமார் கைதேர்ந்தவர்.

டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.