சிகரெட் வாங்க பணம் தர மறுத்த தாய் படுகொலை! மகன் கைது!!

சிகரெட் வாங்க பணம் தர மறுத்ததால் தாயை மகனே அடித்து கொலை செய்துள்ளார். மகனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

அரக்கோணம்: சிகரெட் வாங்க பணம் தர மறுத்ததால் தாயை மகனே அடித்து கொலை செய்துள்ளார். மகனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அரக்கோணம் அருகே உள்ள குருவராஜபேட்டையை சேர்ந்த ஆறு முகத்தின் மனைவி அமிர்தம்மாள் (80). கணவர் மறைந்து விட்ட நிலையில், இவர் சற்றே மனநலம் பாதித்த மகன் ராஜா (48) உடன் வாழ்ந்து வந்தார். 

வியாழக்கிழமை இரவு ராஜா தனது தாயிடம் சிகரெட் வாங்க காசு கேட்டுள்ளார். காசு தர தாய் அமிர்தம்மாள் மறுத்த நிலையில், வீட்டில் இருந்த பெரிய பாத்திரத்தால் தாயை தலையில் அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அமிர்தம்மாள் உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து அறிந்த அரக்கோணம் கிராமிய காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மகனே தாயை கொன்றது தெரியவந்து மகன் ராஜா வை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com