கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதுச்சேரி நிதி நிலவரம்! ஆளுநர், முதல்வருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோரிடம் வெள்ளிக்கிழமை காலை ஆலோசனை மேற்கொண்டார்.

News image
Updated On :7 ஜூலை 2023, 7:59 am

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோரிடம் வெள்ளிக்கிழமை காலை ஆலோசனை மேற்கொண்டார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை காலையில் சென்னையிலிருந்து புதுச்சேரி வந்தார். அவரை ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வரவேற்றார். அதையடுத்து முதல்வர் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மத்திய அமைச்சரை வரவேற்றனர்.

பின்னர் துணைநிலை ஆளுநர் மாளிகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவர் ஆர். செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், தேனி சி.ஜெயக்குமார், சாய் ஜெ.சரவணன்குமார், சந்திரப்பிரியங்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் புதுவையில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் கேட்டறிந்ததாகவும், நிதி நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.