ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மேட்டூர் அணை நீர்மட்டம்: காவிரி டெல்டா விவசாயிகள் கவலை!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :9 ஜூலை 2023, 4:22 am

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக  ஜூன் 12 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. 

நீர் வரத்து வெகுவாக குறைந்த நிலையில், தொடர்ந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஜூன் 12 ஆம் தேதி 103.35 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 82.34 அடியாக குறைந்தது.

கடந்த 27 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 21 அடி வரை குறைந்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. 

இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 104 கன அடியாக குறைந்தது. அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ள நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
 
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது.

அதேபோல, அணையின் நீர் இருப்பும் நாள் ஒன்றுக்கு ஒரு டிஎம்சி குறைந்து வருகிறது. இன்று மேட்டூர் அணையின் நீர் இருப்பு 44.32 டிஎம்சி மட்டுமே உள்ளது.

மேட்டூர் அணையில் உள்ள மீன்வளத்தை பாதுகாக்கவும், குடிநீர் திட்டங்களுக்காகவும் அணையில் 9.5 டிஎம்சி தண்ணீர் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
 
மீதமுள்ள தண்ணீர் 35 நாள் பாசனத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அதன் பிறகு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 கேரளம் மற்றும் கர்நாடகம மாநிலங்களில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தாலும் அங்குள்ள அணைகள் நிரம்பிய பிறகு தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 82.34 அடியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.